முத்து-மீனா செய்த உதவி, குடும்பத்திற்கே இன்ப அதிர்ச்சி கொடுத்த மனோஜ்... சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை
Siragadikka Aasai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் ஒன்றாக உள்ளது சிறகடிக்க ஆசை.
நியாயமாக வாழ்க்கை நடத்தி முன்னேற வேண்டும் என்று நினைக்கும் அண்ணாமலை என்பவரின் குடும்பத்தை மையப்படுத்திய கதை தான் இது. இப்போது கதையில் மனோஜின் கடையில் இருந்த மொத்த பொருட்களும் திருடு போய்விட்டது.

இதனால் மனோஜ் சுத்தமாக மனமுடைந்து காணப்படுகிறார், பொருட்கள் இல்லையெனில் என் தொழிலே போனது, இனி என்ன செய்வேன் என புலம்பிய வண்ணம் உள்ளார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், மீனாவிற்கு தெரிந்தவர் ஒருவர் கம்மி விலைவில் ஏசி வாங்கியதை கூற அவர் அளித்த விவரம் வைத்து அந்த இடத்திற்கு ஏசி வாங்க செல்கிறார். அங்கு முத்து-மீனா, ரவி-ஸ்ருதி 4 பேரும் செல்கிறார்கள்.

அந்த இடத்தில் நிறைய பொருள்கள் இருப்பதை கண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. உடனே இந்த பொருள்களின் ஓனர் யார் என கேட்க அவர் வருகிறார், அது யாரென்றால் மனோஜ் கடையில் வேலை செய்தவர் தான்.
உடனே முத்து அவரை பிடித்து அடித்து போலீஸை வரவைக்கிறார். மனோஜிற்கும் இந்த விஷயத்தை கூற அவர் வந்து திருடியவர்களை அடிஅடியென அடிக்கிறார். போலீஸில் திருடியவர்களை பிடித்து கொடுத்ததும் மனோஜ் எமோஷ்னல் ஆகி முத்துவை கட்டியணைத்து நன்றி கூறுகிறார்.

பின் மீண்டும் குடும்பத்தினரை வைத்துக்கொண்டு கடையை திறக்கிறார். அப்போது மனோஜ் முத்து-மீனாவிற்காக உடைகள் வாங்கி அதை அப்பா-அம்மா கையால் கொடுக்க சொல்கிறார்.
அவரின் இந்த செயலை கண்டு குடும்பமே இன் அதிர்ச்சி ஆகிறார்கள்.
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri