விஜயாவை அசிங்கப்படுத்திய ஸ்ருதியின் அப்பா, கூலாக முத்து கொடுத்த ஷாக்... சிறகடிக்க ஆசை சீரியல்

By Yathrika Oct 07, 2026 09:30 PM GMT
Report

சிறகடிக்க ஆசை

அண்ணாமலை தனது அம்மாவின் உடல்நிலை சரியில்லாததால் தற்போது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

இன்றைய எபிசோடில், மீனா ஊரில் இருந்து வந்த பிறகு தனது அம்மாவை சந்திக்க வீட்டிற்கு சென்றுள்ளார், ஆனால் அங்கு அவரது அம்மா இல்லை. வீட்டு ஓனரிடம் கேட்டபோது சத்யா அவரது அம்மாவை அழைத்து சென்றுவிட்டார் என்கிறார்.

கடைக்கு வந்தால் அங்கேயும் தனது அம்மா இல்லை என்பதால் சீதாவிற்கு போன் செய்து மீனா விஷயத்தை அறிந்து கொள்கிறார். தன்னிடம் அம்மா எதுவும் கூறாமல் சென்றது நினைத்து மீனா வருத்தப்படுகிறார்.

பின் வீட்டிற்கு ஸ்ருதியின் அம்மா-அப்பா வருகிறார்கள். அவர்கள் ஒரு புதிய மெடிக்கல் லேப் திறப்பதாக கூறுகிறார், அதற்காக அண்ணாமலை குடும்பத்தை அழைக்க வருகிறார்கள்.

விஜயாவை அசிங்கப்படுத்திய ஸ்ருதியின் அப்பா, கூலாக முத்து கொடுத்த ஷாக்... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial Oct 08 Episode Promo

புரொமோ

ஸ்ருதி அம்மா-அப்பாவின் புதிய தொழில் துவங்கும் இடத்திற்கு விஜயா தனது குடும்பத்துடன் செல்கிறார்.

அங்கு ஒருவர் நீங்கள் அவரின் சம்பந்தி தானே கொஞ்சம் பேசுங்கள் என்கிறார். அப்போது ஸ்ருதியின் அப்பா அவர்களுக்கு ஆங்கிலம் எல்லாம் தெரியாது என அசிங்கப்படுத்த முத்து திடீரென அனைவர் முன்பும் ஆங்கிலத்தில் பேசி அசத்துகிறார்.

அவர் பேசுவதை கண்டு விஜயா, ஸ்ருதி அம்மா-அப்பா அதிர்ச்சியாக பார்க்கிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US