சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் டிஆர்பியில் எப்போதும் நம்பர் 1 இடத்தை பிடித்துவரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில், மனோஜை ஏமாற்றி வரும் ராஜா-ராணியை வீட்டிற்கு அழைத்துவந்த முத்து ஒரு பிளான் போடுகிறார்.
அதாவது தனது அண்ணன் உன்னை மோசம் செய்துவிட்டார் அல்லவா அவன் உன்னை திருமணம் செய்வான் என அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார். அந்த பயத்தில் ராணி நடந்த உண்மைகள் அனைத்தையும் கூறிவிடுகிறார்.
இருவரும் அண்ணாமலையிடம் அய்யா நாங்கள் பணம் எடுக்கவில்லை எங்கள் மீது பழி சுமத்தியதால் தான் அவரை மிரட்டினோம் என கூறி தங்களது தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு செல்கின்றனர்.
அவர்கள் மீது தவறு இல்லை என்றால் அந்த பணத்தை மனோஜ் அல்லது ரோஹினி தான் எடுத்திருக்க வேண்டும் என முத்து கணிக்கிறார். இதனால் மனோஜ்-ரோஹினி இருவரும் ஒருவரையொருவர் சந்தேகிக்கிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோட் உண்மை வெளிவந்ததுடன் முடிவுக்கு வருகிறது. பின் நாளைய எபிசோடின் புரொமோவில், ரோஹினி சிந்தாமணிக்கு ஏதோ பெரிய ஆர்டர் வாங்கி கொடுக்கிறார்.
அந்த ஆர்டர் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்கிறார். அதாவது மீனாவின் அம்மா கடையை அங்கிருந்து தூக்க வேண்டும் என ரோஹினி கூற சிந்தாமணி கொஞ்சம் யோசிக்கிறார்.
நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.