மீனா கர்ப்பமாக விஷயத்தை கூறிய முத்து, யாரும் எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்த விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த சில நாட்களாக கதையே இல்லாமல் சாதாரண கதைக்களம் ஒளிபரப்பாகி இருந்தது.
இன்றைய எபிசோடில் ஒரு சூப்பரான சந்தோஷ நிகழ்வு நடந்துள்ளது. அதாவது மீனாவிற்கு தலைசுற்றல் இருந்ததால் சீதா வேலை செய்யும் மருத்துவமனைக்கு முத்து-மீனா செல்கிறார்கள்.

அங்கு மருத்துவர் மீனா கர்ப்பமாக இருப்பதாக கூற முத்து எல்லையே இல்லா சந்தோஷம் அடைகிறார். பின் வீட்டிற்கு வந்தவர்கள் இந்த விஷயத்தை கூறுகிறார்கள். முத்து-மீனா வாழ்க்கையில் எது நடந்தாலும் கண்டுகொள்ளாத விஜயா மீனா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கேட்டதும் சந்தோஷம் அடைகிறார்.
இருவரையும் ஆசீர்வதித்து கட்டியணைத்து சந்தோஷப்படுகிறார். சாமி கும்பிட்டுவிட்டு மீனாவிற்கு பொட்டு வைத்து சந்தோஷ செய்தி சொல்லிருக்கீங்க, இந்த குடும்பத்தின் முதல் வாரிசு என கூற உடனே ஸ்ருதி ரோஹினி தானே முதலில் என்றதும் விஜயா, இதோபார் அவள் சந்தோஷ செய்தி சொல்லியிருக்கா, இந்த நேரத்தில் எதுவும் பேச வேண்டாம் என அமைதியாக கூறுகிறார்.

பின் நார்மல் பிரசவம் ஆக இப்படியெல்லாம் செய்யனும், இதையெல்லாம் செய்ய வேண்டும் என நிறைய விஷயங்கள் கூறுகிறார்.
புரொமோ
வீட்டில் அனைவருக்கும் சந்தோஷ செய்தி சொன்ன முத்து-மீனா இந்த விஷயத்தை அண்ணாமலைக்கு போன் செய்து கூறுகிறார்கள். அவர் சந்தோஷப்பட தனது அம்மாவிடமும் கூறி சந்தோஷப்படுகிறார்.
