எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களை தாண்டி இப்போது சீரியல்கள் மூலமாகவும் கெத்து காட்டி வருகிறார்கள்.
இந்த தொலைக்காட்சியில் நம்பர் 1 இடத்தில் இருந்து வந்த சிறகடிக்க ஆசை கடந்த வார டிஆர்பியில் மட்டும் 2வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கு முன்பு எல்லாம் நம்பர் 1 இடத்திலேயே தான் இருந்து வந்தது.
தற்போது தொடரின் கதையில் ரோஹினி செய்த சதியால் மீனா அம்மாவின் கடை மற்றும் அவரது ஸ்கூட்டியும் இல்லாமல் போனது.
ஆனால் முத்து இருக்க பயம் ஏன் என்பது போல அவர் மாமியார், மனைவி இருவரின் பிரச்சனையையும் தீர்த்துவிட்டார்.
இன்றைய எபிசோட்
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் மகிழ்ச்சியான எபிசோடுடன் முடிந்துள்ளது.
ஸ்ருதியின் ரெஸ்டாரன்ட் திறப்பு விழா கோலாகலமாக நடந்துள்ளது. ரெஸ்டாரன்ட் நிகழ்வு சந்தோஷமாக நடக்க மீனா-சீதாவிற்கு ஒரு உண்மையும் தெரிய வந்துள்ளது.
அதாவது முத்துவிற்கு உதவிய Corporation அதிகாரி ஸ்ருதி ரெஸ்டாரன்ட் வருகிறார், அவர் ரெஸ்டாரன்ட் Chef உறவினராக அங்கு வருகிறார்.
அப்போது மீனாவை பார்த்த அந்த அதிகாரி மனைவி முத்துவால் தான் உங்களது அம்மாவின் கடை திரும்ப வந்தது என கூற அதை சீதா கேட்டுகிறார். இதுபற்றி ஏன் கூறவில்லை, அருண் தான் காரணம் என நினைத்ததாக கூறி முத்துவிடம் சண்டை போடுகிறார்.