கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ
சிறகடிக்க ஆசை
இன்றைய எபிசோடில், சிறகடிக்க ஆசை சீரியலில் தரமான ஒரு சம்பவம் நடந்தது. வீட்டிற்கு சென்ற சீதா அருணிடம் உண்மையை என்னிடம் ஏன் கூறவில்லை, மாமாவால் தான் என் அம்மாவின் கடை கிடைத்துள்ளது என முத்துவை பெருமையாக பேசியுள்ளார்.
அதனைக் கேட்ட அருண் தனது சுயருபத்தை சீதாவிடம் காட்டியுள்ளார், அவன் ஒரு டிரைவர், ரவுடி அவனை என்னுடன் சேர்த்து வைத்து பேசாதே என கோபமாக சண்டை போடுகிறார்.
இதனைக் கேட்டு சீதாவும் கோபப்பட எனக்கு பிடிக்காதவர்கள் உனக்கு மிகவும் பிடித்தால் பின் ஏன் என்னை திருமணம் செய்ய வேண்டும் அங்கேயே போய் இரு என கோபமாக கூறிவிட்டு செல்கிறார். இதனால் கோபப்பட்ட சீதா தனது ஆடைகளை எடுத்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறார்.
இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா-அப்பா, நீதுவிடம் ரவியுடன் Illegal Affairஆ என கேட்க கோபத்துடன் அந்த இடத்தை விட்டு சென்றுவிடுகிறார். இந்த விஷயம் அறிந்த ரவி செம கோபம் அடைகிறார், இதை ஸ்ருதியிடம் கூறினால் அவளே கண்டிப்பாக சண்டை போடுவாள் என்கிறார்.
புரொமோ
எபிசோட் முடிந்து அடுத்த வாரத்திற்கான புரொமோ வெளியானது. அதில் மனோஜ் கடையில் ஒரு குழந்தையை போட்டு அடிக்க அதைப்பார்த்த அவரது தாய் குழந்தையை போய் அடிக்கிறாயே உனக்கு எல்லாம் எப்படி குழந்தை பிறக்கும் என்கிறார்.
அதைக்கேட்டு தனது நண்பனுடன் சேர்ந்து குழந்தை பிறக்க வேண்டும் என ஜோசியம் பார்க்கிறார். அவர் குழந்தை வேண்டும் என்றால் நீங்கள் முதலில் குழந்தையாக மாற வேண்டும் என கூற அதன்பின் வீட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
அதாவது குழந்தை போல் தொட்டில் ஆடுவது, பால் புட்டியில் குடிப்பது என செய்கிறார்.

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
