முத்து எதர்சையாக செய்த விஷயம் அதனால் சஸ்பென்ட் ஆன அருண், ஷாக்கில் சீதா... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில், வித்யா-முருகன் திருமணம் கோவிலில் கோலாகலமாக நடந்தது.
திருமணத்திற்கு மீனா-முத்து பரபரப்பாக வேலை செய்கிறார்கள், இன்னொரு பக்கம் ரோஹினியும் உள்ளார். அந்த திருமணத்திற்கு வந்த முருகனின் உறவினர் ரோஹினியின் முதல் கணவரின் உறவினராம்.
அவர் ரோஹினியிடம் பேச முயற்சிக்கிறார் அதனை மீனாவும் கவனிக்கிறார். உறவினருடன் ரோஹினி பேசும்போது மீனா அவரை அழைக்க வித்யாவின் சித்தி இவர் அனுப்பிவிட்டு வருகிறேன் என செல்கிறார். ஆனால் வித்யா, எனக்கு சித்தியே கிடையாது என கூற மீனா குழப்பம் அடைகிறார்.
பின் ரோஹினி முதல் கணவர் உறவினரிடம் கோபமாக பேசி அவரை அனுப்பிவிடுகிறார். பின் முத்து காரில் சவாரிக்கு செல்லும் போது செக்கிங்கிற்காக இறங்குகிறார், அந்த இடத்தில் அருணும் உள்ளார்.
அப்போது வந்த ஒரு பைக் காரர் சாலை ஓரத்தில் நடந்துவந்த பெண்ணை தள்ளிவிட்டு செல்கிறார். அதைப்பார்த்த அருண் பைக் காரனை துரத்தி செல்ல முத்து சாலையில் விழுந்தவரை காப்பாற்றுகிறார்.
புரொமோ
பின் நாளைய எபிசோடிற்கான புரொமோவில், சாலையில் இருந்தவர்கள் முத்து செய்த காரியத்தை பாராட்ட, அருண் செய்த செயலை மோசமாக விமர்சிக்கிறார்கள்.
இதனை சீதாவும் பார்க்கிறார், பின் வீட்டிற்கு வந்த அருண் தன்னை சஸ்பென்ட் செய்தார்கள் என்கிறார்.