மாமியாரை காண மருத்துவமனை வந்த மருமகன்கள், அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் கொஞ்சம் அதிரடியாகவே சென்றுள்ளது.
ஆரம்பமே பார்வதி வீட்டில் கதை ஒளிபரப்பாகிறது, விஜயாவின் யோகா கிளாஸ் வந்தவருடன் அதிகம் பேசி பழகுகிறார் பார்வதி. தற்போது இருவரும் சேர்ந்து ஒரு ஸ்டோரி யூடியூப் தொடங்க உள்ளனர்.
ஆனால் அவரிடம் பார்வதி அதிகம் பேசுவது விஜயாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதுகுறித்து விஜயா பார்வதியிடம் கேட்க அவரோ நான் இந்த வீட்டில் தனியாகவே உள்ளேன், பேச ஒரு ஆள் இல்லை.
நீ எப்போவாவது தான் வற, அதுவும் நீ உன் கிளாஸிற்காக தான் வர, நான் சந்தோஷமாக எனது வாழ்க்கையை வாழ எனக்கு பிடித்த விஷயங்களை செய்ய ஆசைப்படுகிறேன், இதில் என்ன தவறு என்கிறார்.
அவர் கதை எழுதி தரப்போகிறார், நான் படிக்கப்போகிறேன் இதில் என்ன இருக்கிறது என கூறிவிட்டு செல்கிறார். அடுத்து மீனா-சீதா அம்மா, மகள்களை நினைத்து கஷ்டப்பட மயக்கம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அங்கு சீதா மீனாவிடம் பேச மறுக்கிறார், பின் அருண் வந்து பேசி அவரது மாமியாரை தனது வீட்டிற்கு அழைத்து செல்ல பேசுகிறார். முதலில் முத்து-மீனா இதற்கு மறுப்பு தெரிவிக்க பின் ஒப்புக்கொள்கிறார்கள்.
புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில், மருத்தவமனை வேலைக்காக சீதாவிடம் பணம் கொடுத்து அனுப்புகிறார்கள்.
அதை கொண்டு செல்லும் வழிலில் ரவுடிகள் சீதாவிடம் இருந்து பணத்தை திருடி செல்ல அந்த இடத்திற்கு எதர்சையாக மீனா வருகிறார். பின் அவரிடம் நடந்த விஷயத்தை ஆட்டோ ஓட்டுனர் கூறுகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் காணலாம்.