கடையை தூக்கிய விவகாரம், யார் பிரச்சனை என கண்டுபிடித்த முத்து... சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியின் படு ஹிட் தொடர்.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 800 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது கதையில், ரோஹினி மீனாவிற்கு பிரச்சனை ஏற்படுத்த சிந்தாமணியை வைத்து ஒரு பிளான் போட்டுள்ளார்.
மீனாவின் அம்மா கடையை தூக்க சொல்ல சிந்தாமணியும் அதை செய்து முடித்துள்ளார், மீனாவின் வண்டியை கூட எடுக்க பிளான் போட்டுள்ளார். மீனாவின அம்மா சாப்பிடாமல் அழுது கொண்டிருக்க அவரது மகள்கள் மற்றும் மகன் சமாதானம் செய்கிறார்கள்.
அப்போது சத்யா, புதியதாக ஒரு மேனேஜர் வந்துள்ளார், அவர் எல்லோரிடமும் பணம் வாங்குகிறார், வாங்கும் பொருளுக்கு பணம் கொடுக்காமல் சுற்றி வருவதாக எல்லோரும் சொல்கிறார்கள் என்கிறார்.
புதிய மேனேஜர்
பண விஷயத்தை மீனா முத்துவிடம் கூற அவர் ஒரு பிளான் போடுகிறார். புரொமோ இன்றைய எபிசோட் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் முடிந்தது.
பின் நாளைய எபிசோட் புரொமோவில், செல்வத்தை வைத்து அந்த புதிய மேனேஜரிடம் புதிய கடை போட பேச கூறுகிறார் முத்து. செல்வமும் அப்படியே மேனேஜரிடம் கேட்க ரூ. 10 ஆயிரம் அவர் கேட்கிறார்.