மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியின் டிஆர்பியில் கெத்தாக டாப்பிலேயே இருக்கும் தொடர்.
சீரியல் ஆரம்பித்த நாள் முதல் இந்த சீரியலுக்கான ரசிகர்களே தனி தான், இப்போது வரை அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
இப்போது கதையில் மீனா, க்ரிஷ் விஷயத்தில் கவனிக்காமல் இருக்க அவருக்கு பிரச்சனை ஏதாவது தர வேண்டும் என யோசித்து சிந்தாமணியிடம் ஒரு விஷயம் செய்ய சொன்னார். மீனாவின் அம்மா கடையை தூக்க வைத்தார், பின் அவரது வண்டியை சிந்தாமணி சேர்த்து தூக்கினார்.
இந்த பிரச்சனையில் மீனா-முத்து அலைந்து கொண்டிருப்பதை பார்த்து ரோஹினி சந்தோஷப்பட்டார்.
புரொமோ
ஆனால் முத்து இருக்கும் போது மீனாவிற்கு பிரச்சனை வந்துவிடுமா என்ன, எப்படியோ அவரது மாமியார் கடையை மீட்டுக் கொடுத்துவிட்டார்.
அதோடு தனது மனைவி மீனாவின் வண்டியையும் பெற்றுவிட்டார். இந்த விஷயங்களுக்கு பின்னால் சிந்தாமணி தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கிறார். பின் சிந்தாமணி அடியாட்களிடம் முத்து பணம் கேட்கிறார்.
உடனே சிந்தாமணி இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் நீதான் இருக்கிறாய் என்பதை கூறாமல் இருக்க நீ ரூ. 40 ஆயிரம் தர வேண்டும் என்கிறார். மீனாவிற்கு பிரச்சனை செய்ய வேண்டும் என நினைத்த ரோஹினி இப்போது அவரே கடும் பிரச்சனையில் சிக்கிவிட்டார்.