திட்டம்போட்டு விஜயாவை ஏமாற்றும் முத்து, மீனா.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த நடக்கப்போவது இதுதான்
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. TRP-யில் டாப்பில் இருக்கும் இந்த சீரியல் தான் தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் என சொல்லப்படுகிறது.
கடந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹிணி முதல் கர்ப்பம் குறித்து பெரும் பூகம்பமே வெடித்தது. இதனால் விஜயா கடும் கோபத்தில் இருந்தார். ஆனால், அதை அசால்டாக சமாளித்து அனைவரையும் தனது நடிப்பால் திசைதிருப்பிவிட்டார் ரோகினி.
அடுத்த நடக்கப்போவது இதுதான்
இதை தொடர்ந்து இந்த சீரியலின் தற்போதைய கதைக்களப்படி, தனது இரண்டாவது மருமகள் மீனாவிற்கும், மூன்றாவது மருமகள் ஸ்ருதிக்கும் இடையே சண்டை வரவேண்டும் என்பதற்காக விஜயா திட்டம் தீட்டி செய்த விஷயத்தால் முத்து - மீனா இருவரும் ரவி - ஸ்ருதி உடன் சண்டை போடுகிறார்கள்.
இத்துடன் தான் கடந்த வாரம் எபிசோட் முடிவுக்கு வந்தது. ஆனால், அவர்கள் சண்டை போடவில்லை விஜயாவை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக நாடகம் ஆடுகிறார்கள். ஆம், அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களே பாருங்க..