சீதாவிற்கு திடீரென தெரியவந்த உண்மை, பின் அவர் செய்த வேலை... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் இப்படியும் ஒரு அம்மா-மகன் இருப்பார்களா என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு ஒளிபரப்பாகி வந்த தொடர்.
இப்போது கதையில் பிரச்சனையாக சென்று கொண்டிருப்பது மீனா-சீதா சண்டை தான். அருண் சஸ்பென்ட் ஆனது உன் புருஷனால் தான் அவரை என் புருஷனிடம் வந்து மன்னிப்பு கேட்க சொல் என சீதா கூற மீனா கண்டிப்பாக முடியாது.

என் புருஷன் தவறு செய்தால் முதலில் மன்னிப்பு கேட்க சொல்வேன், ஆனால் இதில் அவரின் தவறு எதுவும் இல்லை என மீனா சண்டை போட்டார்.
இது ஒருபுறம் இருக்க சீதா மருத்துவனை பண பிரச்சனை வெடித்தது, அதனால் அவரது வேலை பறிபோகும் நிலைமை வர முத்து எப்படியோ பிரச்சனையை தீர்த்துவிட்டார்.

புரொமோ
முத்துவால் தான் சீதாவின் வேலை பிரச்சனை முடிந்தது என்பதை சீதா புரிந்து கொள்கிறார்.
பின் வீட்டிற்கு சென்று மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார், முத்துவிற்கு போன் செய்தும் மன்னிப்பு கேட்கிறார். இதோ இந்த வாரத்திற்கான புரொமோ,