சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. வெளிவந்த ப்ரோமோ
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. சமீபத்தில் நடந்த விஜய் தொலைக்காட்சி விருதுகளில் அதிக விருதுகளை சிறகடிக்க ஆசை கைப்பற்றியது.
இந்த நிலையில் வரும் வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருப்பது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் விஜயா தனது மருமகள் மீனாவிடம் சாப்பாடு எடுத்துக்கொண்டு பார்வதி வீட்டிற்கு வரும்படி கூறிவிட்டு செல்கிறார்.
ப்ரோமோ
தனது மாமியாருக்காக உணவு எடுத்து செல்லும் மீனா, வழியில் ஒரு பாட்டி மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்துவிட்டு அவர்களுக்கு உணவை கொடுத்துவிடுகிறார். இதன்பின் அத்தைக்கு என்ன உணவு எடுத்து செல்வது என குழப்பத்தில் இருக்கும் மீனா, கடையில் இருந்து பிரியாணி வாங்கி கொண்டு செல்கிறார்.
பிரியாணியை சாப்பிட்டதால் விஜயாவிற்கு உடல்நிலை சரியில்லாமல், வீட்டில் மீனா சமைத்த விஷயம் விஜயாவிற்கு தெரியவருகிறது. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..