ரேகா - சத்யாவின் காதல் காட்சி.. சிறகடிக்க ஆசை படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த நடிகை
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. கடந்த இரண்டு ஆண்டுகளாக TRP-யில் டாப் 10ல் இந்த சீரியல் இடம்பெற்று வருகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வார எபிசோடில் சத்யா தனது பிறந்தநாள் அன்று ரேகாவிடம் காதலை கூறப்போவதாக மீனாவிடமும், முத்துவிடமும் கூறினார்.
படப்பிடிப்பு வீடியோ
இதற்கு மீனா வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தாலும், முத்து 'நான் இருக்கிறேன், நீ தைரியமாக போய் உன் காதலை சொல்லு' என கூறினார். இதன்பின், ரேகாவை சந்தித்த சத்யா தனது காதலை அவரிடம் கூற இருவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், ரேகாவிடம் சத்யா காதல் கூறிய காட்சியின் படப்பிடிப்பு தள வீடியோவை ரேகா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ:
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri