புதிய மைல்கல்லை எட்டிய விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல்... என்ன விஷயம்...
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் அழுத்தமான கதைக்களத்தை கொண்டு சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை.
முத்துவிற்கு சிறுவயதில் என்ன தாண்டா ஆனது என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு கதைக்களம் சென்றது. தற்போது அந்த ரகசியமும் உடைந்துவிட்டது,
மனோஜ் செய்த காரியத்தால் தான் முத்து சீர்திருத்த பள்ளிக்கு சென்றுள்ளார் என இன்றைய எபிசோடில் தெரிந்துவிட்டது. முத்துவின் சோக கதையை கேட்டு மீனாவும் செம எமோஷ்னல் ஆகிறார்.
கொண்டாட்டம்
டிஆர்பியில் எப்போதும் டாப்பில் இருந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 600 எபிசோடுகளை கடந்துள்ளதாம். இந்த விஷயம் வெளியாக ரசிகர்கள் சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.