பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் கொண்டாட்டத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... என்ன விசேஷம் தெரியுமா?
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான கதைக்களத்துடன் இப்போது ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.
முத்து-மீனா என்ற ஜோடியின் வாழ்க்கை பயணத்தை பற்றிய கதையாக இருக்கும் இந்த தொடரில் கடந்த சில வருடங்களாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு ரகசியம் இப்போது குடும்பத்திற்கு தெரிய வந்துவிட்டது.

ரோஹினி தனது முதல் திருமணத்தை மறைத்து வைத்திருந்த நிலையில் முத்து அதனை வெளிக்காட்டிவிட்டார். ரோஹினியை குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியே அனுப்ப அவர் சிந்தாமணி வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.
சிந்தாமணி, ரோஹினியை வைத்து முத்து-மீனாவை அழிக்க முடிவு செய்துள்ளார்.

கொண்டாட்டம்
இப்போது சிறகடிக்க ஆசையில் பரபரப்பான கதைக்களம் ஒளிபரப்பாகி வர சீரியல் குழுவினர் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அது என்னவென்றால் சிறகடிக்க ஆசை சீரியல் 900 எபிசோடுகளை எட்டிவிட்டதாம். இதனை முத்து என்கிற வெற்றி வசந்த் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.