என் குழந்தைக்கு மனோஜ் தான் அப்பா.. நீதிமன்றத்தில் ரோகிணி ஒப்படைத்த ஆவணங்கள்! சிறகடிக்க ஆசை சீரியல் Promo

By Karthick Raja Sep 06, 2026 05:05 AM GMT
Report

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றிய Promo வீடியோ வெளியாகியுள்ளது.

அஜித்தின் கிளாடியேட்டர் ட்ரைலர் முன்பதிவு இவ்வளவா... ரெக்கார்ட் சாதனை

அஜித்தின் கிளாடியேட்டர் ட்ரைலர் முன்பதிவு இவ்வளவா... ரெக்கார்ட் சாதனை

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது மனோஜ் - ரோகிணி விவாகரத்து வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

என் குழந்தைக்கு மனோஜ் தான் அப்பா.. நீதிமன்றத்தில் ரோகிணி ஒப்படைத்த ஆவணங்கள்! சிறகடிக்க ஆசை சீரியல் Promo | Siragadikka Aasai Serial Rohini Manoj Divorce Case

விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்போது, திடீரென ரோகிணி மயங்கி விழ, அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்பது தெரிய வந்தது. மனோஜின் குழந்தை தன் வயிற்றில் வளர்கிறது, இதனால் விவாகரத்து தரமாட்டேன் என்கிற முடிவுக்கு வந்தார். ஆனால், மனோஜ் தனக்கும் இந்த குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார். விவாகரத்து தரமுடியாது என உறுதியாக இருந்த ரோகிணி, ஒரு கட்டத்தில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டார்.

நீதிபதி எடுக்கப்போகும் முடிவு

விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வர, மனோஜின் வழக்கறிஞர் உடனடியாக இவர்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கேட்க, அப்போது ரோகிணி தான் கர்ப்பமாக இருப்பதைப்பற்றியும், தன் குழந்தைக்கு மனோஜ் தான் தந்தை என்பதையும் மருத்துவ ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார்.

என் குழந்தைக்கு மனோஜ் தான் அப்பா.. நீதிமன்றத்தில் ரோகிணி ஒப்படைத்த ஆவணங்கள்! சிறகடிக்க ஆசை சீரியல் Promo | Siragadikka Aasai Serial Rohini Manoj Divorce Case

இந்நிலையில், நீதிபதி எடுக்கப்போகும் முடிவு என்ன? விவாகரத்து கொடுப்பாரா இல்லையா என்பதை வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US