சிறகடிக்க ஆசை சீரியல் : மகனுடன் மருத்துவமனையில் ரோகிணி.. மீனாவிடம் சிக்கியதால் உண்மை வெளிவருமா
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் டாப் சீரியலாக இருக்கிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போதைய கதையின்படி ரோகிணியின் மகனுக்கு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மருத்துவமனையில் க்ரிஷ் இருப்பதை பார்த்த முத்து - மீனா இருவரும் ரோகிணி அம்மா மற்றும் மகன் இருவரையும் தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். இதனால் விஜயா செம கடுப்பில் இருந்தார். எப்படியாவது இவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என திட்டம்போட்டும் எதுவுமே நடக்கவில்லை.
இதற்கிடையில் ரோகிணியை இதுவரை தனது அத்தை என நினைத்துக்கொண்டிருந்த கிரிஷுக்கு ரோகிணி தான் தனது அம்மா என தெரியவந்துவிட்டது.
உண்மை வெளிவருமா
இந்த நிலையில், மருத்துவமனையில் க்ரிஷ் கண்ணில் இருந்த கட்டை மருத்துவர் கழட்டியவுடன் தனது தாய் ரோகிணியை பார்த்துவிட்டு, நான் இனிமேல் உன்னுடன் இருக்கலாமா என கேட்கிறார். அதற்கான காலம் கூடிய விரைவில் வரும் என ரோகிணி கூறுகிறார்.
இந்த சமயத்தில் அந்த மருத்துவமனைக்கு மீனா வர ரோகிணி அதிர்ச்சியில் உரைக்கிறார். இதனால் உண்மை என்னவென்று என்பது மீனாவிற்கு தெரியவருமா என பொறுத்திருந்து எபிசோடில் பார்ப்பபோம்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..