விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட ரோஹினி, அடுத்து?... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

By Yathrika Aug 31, 2026 04:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது இரண்டு விஷயம் முக்கியமாக செல்கிறது.

ஒன்று ரோஹினி-மனோஜ் விவாகரத்து பிரச்சனை, இன்னொன்று சத்யா-ரேகா திருமண வரவேற்பு கொண்டாட்டம். கடைசி வரை எனக்கு மனோஜ் தான் புருஷன் என்று கூறிவந்த ரோஹினி வயிற்றில் குழந்தை இருந்து அவரை விவாகரத்து செய்கிறேன் என கூறிவிட்டார்.

விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட ரோஹினி, அடுத்து?... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Sep 01 Episode Promo

வரும் ஞாயிறு வக்கீலை வீட்டிற்கு வர கூறியுள்ளார், கையெழுத்த போடுகிறேன் என கூற மனோஜும் சந்தோஷத்தில் இருக்கிறார். மற்றொரு பக்கம், சிந்தாமணி, முத்து-மீனாவை பழிவாங்க சத்யாவை தன் பக்கம் இழுக்க நிறைய டிராமா போட்டு வருகிறார்.

சத்யா அம்மாவிற்கு பத்திரிக்கை கொடுக்க வரும்போது அவர் ஏழை என்பதை குத்திக்காட்டும் வகையில் சில விஷயங்கள் செய்கிறார். அதேபோல் விஜயா வீட்டிற்கு சென்று முத்து-மீனாவிற்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்த விஜயா அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்.

விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட ரோஹினி, அடுத்து?... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Sep 01 Episode Promo

புரொமோ

இன்றைய எபிசோடில், மனோஜிடம் மனம் பேசுகிறார் ரோஹினி. தனது கணவர் மீது எவ்வளவு காதல் உள்ளது என ரோஹினி பேச, மனோஜோ விவாகரத்து பற்றி மட்டுமே பேசுகிறார்.

விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட ரோஹினி, அடுத்து?... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Sep 01 Episode Promo

அடுத்து திருமண வரவேற்பு பற்றி சத்யா, அவரது அம்மா மற்றும் மீனா-முத்து 4 பேரும் பேசிக்கொள்கிறார்கள். 3 பேரும் நாங்கள் திருமண வரவேற்பிற்கு வரவில்லை என கூற சத்யா அவர்களை வர சொல்லிவிட்டு கிறம்புகிறார்.

பின் நாளைய எபிசோடின் புரொமோவில், ரோஹினி சொன்னது போல் விஜயா வீட்டிற்கு வருகிறார். அங்கு வக்கீல் விவாகரத்து நோட்டீஸ் காட்ட ரோஹினி கையெழுத்து போடுகிறார்.

ஆனால் உண்மையாகவே விவாகரத்து செய்கிறாரா அல்லது வேறு ஏதாவது டுவிஸ்ட் இருக்கா என்பதை பொறுத்திருந்து காண்போம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US