ரோஹினி விஷயத்தில் மனோஜிற்கு எதிராக திரும்பிய விஜயா, அடுத்து நடந்தது என்ன?... சிறகடிக்க ஆசை சீரியல்

By Yathrika Sep 07, 2026 08:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக இழு இழு என இழுத்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயில்-சரவணன் விவாகரத்து பிரச்சனை எப்படியோ முடிந்துவிட்டது.

மயில் விவாகரத்திற்கு ஒப்புக்கொண்டு எந்த பணமும், சொத்தும், எந்த ஒரு உதவியும் வேண்டாம் என கூறிவிட்டார்.

அந்த சீரியலை தொடர்ந்து சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ்-ரோஹினி விவாகரத்து பிரச்சனையும் கடந்த சில மாதங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த விவாகரத்து பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை.

ரோஹினி விஷயத்தில் மனோஜிற்கு எதிராக திரும்பிய விஜயா, அடுத்து நடந்தது என்ன?... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial Sep 08 Episode Promo

எபிசோட்

இன்றைய எபிசோடில், ஸ்பெஷல் பூஜையெல்லாம் முடித்துவிட்டு விஜயா அண்ணாமலை தவிர அனைவருடனும் நீதிமன்றம் வருகிறார்.

அங்கு மனோஜ் தான் விவாகரத்து கொடுப்பதில் உறுதியாக இருப்பதாக கூற ரோஹினி திடீரென தனது Medical Report சமர்ப்பிக்கிறார். அதைப்பார்த்த நீதிபதி, ரோஹினி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வைத்து நிறைய கேள்விகள் எழுப்புகிறார்.

ரோஹினி விஷயத்தில் மனோஜிற்கு எதிராக திரும்பிய விஜயா, அடுத்து நடந்தது என்ன?... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial Sep 08 Episode Promo

பின் நாளைய எபிசோடின் புரொமோவில், வீட்டிற்கு வந்த விஜயா, அதுநாள் வரை தனது மகன் தவறு செய்திருக்க மாட்டான் என நம்பிக்கொண்டிருந்தவர் அந்த குழந்தை உன்னுடையது தானா என கோபமாக மனோஜை பார்த்து கேட்கிறார்.

அவர் வழக்கம் போல் எதுவும் சொல்லாமல் முழிக்கிறார், உண்மை வெளிவருமா, விஜயா செய்யப்போவது என்ன என்பதை பொறுத்திருந்து காண்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US