க்ரிஷிற்கு பள்ளியில் வந்த ஆபத்து, முத்து செய்த வேலை... அடுத்தடுத்து பரபரப்பான கதைக்களத்துடன் சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில், வீட்டில் அண்ணாமலை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஸ்ருதியின் புதிய ரெஸ்டாரன்ட் குறித்து பேசப்படுகிறது.
ரெஸ்டாரன்டை எப்படி புரொமோட் செய்யலாம், என்னவெல்லாம் செய்யலாம் என்ற பேச்சு வார்த்தைகள் நடக்கிறது. பின் க்ரிஷை, முத்து-மீனா Counsellingக்காக மருத்துவமனை கொண்டு செல்கிறார்கள்.
அங்கு எதிர்ப்பாரா விதமாக ரோஹினி அங்கே வந்து க்ரிஷிடம் தன்னைப்பற்றி எதுவும் சொல்ல கூடாது என கூறுகிறார். மருத்துவர் பரிசோதனை செய்ததில் க்ரிஷிற்கு அவரது அம்மா உடன் இல்லாதது தான் வருத்தம், வேறு எந்த பிரச்சனையும் இல்லை என கூறுகிறார்.

ஜனனி கேட்ட கேள்வி, சாமியாரை அடிக்கச் சென்ற கதிர், அப்படி என்ன சொன்னார்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
புரொமோ
இன்றைய எபிசோட் இதோடு முடிவடைய, நாளைய எபிசோட் புரொமோ வருகிறது. அதில், போலீஸ் அதிகாரிகள் க்ரிஷை கூட்டி செல்ல வந்துள்ளார்கள் என பள்ளி அதிகாரி கூற முத்து அவனை மீனாவுடன் அங்கிருந்து அனுப்பிவிடுகிறார்.
பின் முத்து போலீஸ் அதிகாரியிடம் க்ரிஷிற்காக கெஞ்சுகிறார், தண்டனை கொடுக்க வேண்டாம் என அழுகிறார்.

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
