சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ...
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர் சிறகடிக்க ஆசை.
கதையில் இப்போது ஒரு விஷயத்தை வைத்தே தொடர் நகர்ந்து வருகிறது, க்ரிஷ் விஷயம் தான். பள்ளியில் தனது அம்மாவை பற்றி பேசியதால் கோபத்தில் க்ரிஷ் பூ தொட்டியை வைத்து அடிக்க செல்ல அதனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
க்ரிஷ் அடிக்க சென்ற பையனின் அப்பா பெரிய பிரச்சனை செய்ய அவரிடம் முத்து-மீனா எப்படியோ கெஞ்சி மன்னிப்பு வாங்கிவிட்டார்.
புரொமோ
க்ரிஷ் விஷயம் குறித்து அண்ணாமலை மற்றும் குடும்பத்தினர் பேசுகிறார்கள். அப்போது முத்து, அம்மா பாசம் கிடைக்காமல் போனால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பது எனக்கு தான் தெரியும் என கூறுகிறார்.
உடனே மனோஜ், ரவுடித்தனம் செய்தால் க்ரிஷும் சீர்திருத்த பள்ளியில் தான் சேர போகிறான் என கூற உடனே முத்து அவரை அடிக்கச் செல்கிறார். மீனா முத்துவிடம் இதுகுறித்து கேட்க முத்துவின் Flashback காட்சிகள் இடம்பெறுகிறது.