முத்து வாழ்க்கையில் நடந்த விஷயம், கதறி கதறி அழுத மீனா... க்ரிஷிற்கு என்ன நடந்தது, சிறகடிக்க ஆசை எமோஷ்னல் புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.
இப்போது கதையில் தொடர் ஆரம்பித்த நாள் முதல் லீட் வைத்தே செல்லப்பட்ட விஷயம் குறித்து உடைக்கப்பட்டுவிட்டது. அதாவது முத்துவை-விஜயா ஏன் வெறுக்கிறார், மனோஜ் என்ன செய்தார் என்பது பலநாள் கேள்வியாக ரசிகர்களிடம் இருக்க தற்போது விடை கிடைத்துவிட்டது.
அதாவது மனோஜ் செய்த தவறுக்காக தான் முத்து சீர்த்திருத்த பள்ளிக்கு சென்றுள்ளார் என்பது தெரிய வந்துவிட்டது. முத்துவின் பள்ளி பருவ கஷ்டத்தை கேட்டு மீனா கதறி அழ இருவரும் மிகவும் எமோஷ்னல் ஆகியுள்ளனர்.
புரொமோ
இன்றைய எபிசோட் முடிந்த பிறகு நாளைய எபிசோடின் புரொமோ வெளியானது.
அதில் க்ரிஷிற்கு பள்ளியில் வைக்கப்பட்ட சோதனையில் பாஸ் ஆக முத்து-மீனா சந்தோஷப்படுகிறார்கள். பின் முத்து, இந்த விஷயத்தை தனது அப்பாவிடம் கூற அவரும் சந்தோஷப்படுகிறார்.
விஜயாவிடம், நான் அப்போது அமைதியாக இருந்ததால் முத்துவிற்கு அந்த நிலைமை ஆனால் க்ரிஷை முத்து காப்பாற்றிவிட்டான் என கூறுகிறார்.