பொய் கூறி வசமாக மீனாவிடம் சிக்கிய விஜயா, ஷாக்கான பார்வதி... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் தொடர்களில் ஒன்றாக உள்ளது சிறகடிக்க ஆசை.
மகனை வெறுக்கும் அம்மாவின் முக்கிய கதையாக தொடர் ஒளிபரப்பாக பின் முத்து-மீனாவிற்கு திருமணம் ஆனபின் கதையே மாறியது. இன்றைய எபிசோடில், க்ரிஷ் பள்ளியில் வைத்த டெஸ்ட்டில் பாஸ் ஆகி பிரச்சனையில் இருந்து தப்பித்துவிட்டான்.
அவன் ஜெயித்ததால் முத்து சந்தோஷத்தில் தனது அப்பாவிடம் போன் செய்து விஷயத்தை கூறுகிறார். இன்னொரு பக்கம் ரோஹினி க்ரிஷ் பிரச்சனையில் இருந்து சிக்க தனது அம்மாவிடம் பேசி நாடகம் போடுகிறார்.
புரொமோ
க்ரிஷ் விஷயத்தை வைத்து விஜயா டாக்டர் பட்டம் வாங்க ஒரு பிளான் போடுகிறார்.
அதாவது தனக்கு தெரிந்த ஒரு குழந்தை பிரச்சனையில் சிக்கியதால் அவர் சீர்திருத்த பள்ளியில் படிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. எனது 2வது மகனின் உதவியுடன் பிரச்சனையை முடித்ததாக தனது யோகா பள்ளியில் கூறுகிறார்.
இதைக் கேட்ட பார்வதியும் செம ஷாக்காக மீனா என்ட்ரி கொடுக்கிறார்.