மீனா தொடங்கிய புதிய தொழில், முத்துவிற்கு தெரிந்த ஷாக்கிங் உண்மை.. சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, இன்றைய எபிசோடில் பரபரப்பான விஷயம் ஒன்றும் இல்லை.
முத்து-மீனா, க்ரிஷை பார்க்க அவன் வீட்டிற்கு செல்கிறார்கள் அப்போது அங்கு ரோஹினியும் இருக்கிறார். முத்து க்ரிஷுடன் விளையாட்டு செல்லலாம் என்ற முடிவில் இருக்க அவரது பாட்டி அவர்களை மறைமுகமாக கிளம்புங்கள் என்று கூறுவது போல் பேசுகிறார்.
இதனை புரிந்துகொண்ட மீனா அங்கிருந்து கிளம்புகிறார். அவர் வழியில் வரும்போது ஒருவர் பூக்களை குப்பைத்தொட்டியில் போடுவதை கண்டு வருந்துகிறார்.
இதனால் பழங்களை வைத்து ஒரு பொக்கே செய்கிறார், அதனை முத்துவிடம் காட்ட அனைவரும் பாராட்டுகிறார்கள். வழக்கம் போல் மனோஜ், ரோஹினி, விஜயா மட்டம் தட்டுகிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோட் சில சாதாரண காட்சிகளுடன் முடிவடைய நாளைய எபிசோடின் புரொமோவில், விஜயா எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்பதை அரிய முத்து பார்வதியிடம் போட்டு வாங்குகிறார்.
அவரும் விஜயா டாக்டர் பட்டம் வாங்க இப்படி செய்வது தெரிந்துவிட்டதா என கூற முத்து ஷாக் ஆகிறார்.