பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா?
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றாக உள்ளது சிறகடிக்க ஆசை.
கதையில் 2 வருடங்களாக ரோஹினி மறைத்து வைத்த அதற்காக பல பொய்களை கூறி தப்பித்துக்கொண்டே வந்த உண்மை முத்து மூலமாக வெளியே வந்துவிட்டது.
இந்த விஜயத்தை அறிந்த விஜயா வழக்கம் போல் ரோஹினியை அடித்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்.
மனோஜ் ரோஹினி செய்த துரோகம் தாங்காமல் மதுவிற்கு அடிமையாகிவிட்டார். விஜயா எப்படியாவது ரோஹினியிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட வேண்டும் என உறுதியாக உள்ளார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், அண்ணாமலை-முத்து, மீனா மறைத்ததற்கான காரணத்தை புரிந்துகொள்கிறார்கள். பின் ஸ்ருதி ரெஸ்டாரன்ட் வந்த ரோஹினி, ஸ்ருதி-மீனாவிடம் தனக்கு உதவ கேட்கிறார்.
ஆனால் அவர்களோ நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் என கோபமாக கூறுகிறார்கள்.
கதைக்களம் சூடாக செல்ல இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. அதாவது வரும் திங்கள் முதல் சிறகடிக்க ஆசை சீரியல் இரவு 9 முதல் 10 மணி வரை 1 மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.