சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் கொண்டாட்ட செய்தி- அட இத யாருமே எதிர்ப்பார்க்கலயே
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெற்றிகரமாக ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் சிறகடிக்க ஆசை.
முத்து மற்றும் மீனா என்ற இரு கதாபாத்திரங்களை முக்கியமாக வைத்து தொடர் நகர்ந்துகொண்டிருக்கிறது.
இப்போது கதையில் மனோஜ் சில மாதங்களாக வேலை இல்லாமல் பொய் சொல்லி வந்த விஷயம் வீட்டில் அனைவருக்கும் தெரியவர ரோஹினி காணாமல் போகிறார்.
பின் அவர் வீட்டிற்கு வந்து இதுபோல் முத்து மனோஜை அசிங்கப்படுத்திக் கொண்டே இருந்தால் இந்த வீட்டில் நாங்கள் இருக்க மாட்டோம் என ரோஹினி, அண்ணாமலையிடம் கூறுகிறார்.
இனி என்ன நடக்கப்போகிறது, விஜயா நினைத்தது போல் முத்து-மீனாவை இந்த விஷயம் வைத்து வெளியே அனுப்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
குட் நியூஸ்
TRPயிலும் டாப்பில் இருக்கும் இந்த தொடர் குறித்து தற்போது சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது வரும் ஜனவரி 17 முதல் 4 நாட்களுக்கு சிறகடிக்க ஆசை சீரியல் 9 மணியில் இருந்து 10 மணி வரை என 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.
இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் சூப்பர் சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.