திடீரென ஏற்பட்ட பிரச்சனை, ஸ்ருதி எடுத்த விபரீத முடிவு... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வார புரொமோவில் ஸ்ருதி-ரவி முதல் திருமணநாள் கொண்டாட்டம் நடக்க உள்ளது.
இன்றைய எபிசோடில் ஸ்ருதியை காணவில்லை என்பதால் ரவி என்ன செய்வது என்று தெரியாமல் மண்டபத்தில் இருக்கும் அனைவரிடத்திலும் ஏதேதோ செய்து சமாளித்து வருகிறார்.
ஆனால் எபிசோட் கடைசியில் ஸ்ருதி அப்பா ரவியிடம் ஏதாவது பிரச்சனையா என கேட்கிறார்.
ஸ்ருதி முடிவு
ரவி, ரெஸ்டாரண்ட் ஓனரை தூக்கியதை பார்த்த ஸ்ருதி கோபத்துடன் சென்றவர் எங்கே போனார் என தெரியவில்லை.
முத்து-மீனா இருவரும் ஸ்ருதியை தேடி அலைய அவர் விவாகரத்து பெற வக்கீல் பார்க்க சென்ற தகவல் தெரிய வருகிறது. பின் ஸ்ருதியை கண்ட முத்து-மீனா இருவரும் அவரை சமாதானப்படுத்த பேசுகிறார்கள்.
நாளை என்ன நடக்கும், ஸ்ருதி-ரவி திருமண கொண்டாட்டம் நன்றாக நடக்குமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.