ரெஸ்டாரண்டை தீவைத்து கொளுத்தி, நீத்துவின் காலை அடித்து உடைத்த மர்ம கும்பல்.. சிறகடிக்க ஆசையில் இன்று
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது ரவியை தான் காதலிக்கிறேன் என நீத்து செய்து வரும் விஷயத்தால் ஸ்ருதி ரவியிடம் இருந்து பிரிந்து தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். நீத்து மன்னிப்பு கேட்டு, ரவியை காதலிக்க மாட்டேன் என கூறினால்தான் மீண்டும் ரவியோடு சேர்ந்து வாழ்வேன் என ஸ்ருதி கூறிவிட்டார்.
மருத்துவமனையில் நீத்து
இதன்பின் முத்து மற்றும் மீனா இருவரும் நீத்துவிடம் சென்று இதுகுறித்து பேசினார்கள். ஆனால், நீத்து கேட்பதாக தெரியவில்லை. இது தொடர்ந்து இப்படி நடந்து வந்த நிலையில், முத்து தனது நண்பனுடன் சேர்ந்து நீத்துவின் ரெஸ்டாரண்டுக்கு சென்று, இனி ரவி வாழ்க்கையில் குறுக்கிட்டால் ரெஸ்டாரண்டை அடித்து உடைத்துவிடுவேன் என முத்து மிரட்டி விட்டு சென்றிருந்தார்.

இந்த நேரத்தில், யாரோ அடையாளம் தெரியாத கும்பல் நீத்துவின் ரெஸ்டாரண்டுக்குள் புகுந்து கேஸ் சிலிண்டர்களை திறந்துவிட்டு, ரெஸ்டாரண்டை தீவைத்து கொளுத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி நீத்துவின் காலை அடித்து உடைத்துவிட்டனர். இதனால் மருத்துவமனையில் நீத்து அனுமதிக்கப்பட, அவரை பார்க்க ரவி அங்கு சென்றுள்ளார்.
கோபத்தில் ரவி
அப்போது, இவை அனைத்திற்கும் உன் அண்ணன் முத்து தான் காரணம் என நீத்து கூற, உடனடியாக வீட்டிற்கு வரும் ரவி, முத்துவின் சட்டையை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என கேட்கிறார். நான் இப்படி செய்யவில்லை என முத்து எவ்வளவு முறை கூறினாலும், ரவி அதை கேட்பதாக இல்லை. முத்து மீது கடும் கோபத்தில் ரவி உள்ளார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் வாரத்தில் பொறுத்திருந்து பார்ப்போம்.
