மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சிட்டியை வைத்து ஒரு குடும்பத்தை அடித்த வழக்கில் ரோஹினி கைதாகி போலீஸ் நிலையத்தில் உள்ளார்.
அங்கு ரோஹினி போலீஸ் அதிகாரியிடம் கெஞ்சுவதை கண்ட மீனா மாமா கஷ்டப்படுவார் என முத்துவிடம் கூறுகிறார். இதனால் முத்து போலீஸ் அதிகாரியிடம் பேசி ரோஹினியை பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறார்.
அந்த இடத்தில் போலீஸ் அதிகாரி நீ செய்த தவறால் அவர் கைதாகி அவரது மனைவி படாத கஷ்டம் பட்டார். அவரிடம் மன்னிப்பு கேள் என கூற மீனாவிடம் ரோஹினி மன்னிப்பு கேட்கிறார்.
முத்து ரிலீஸ் ஆனதை எதிர்ப்பார்க்காத அருண் மீனாவிடம் கமிஷ்னரிடம் பேசினேன் என பொய் கூறுகிறார்.
ஆனால் முத்துவோ இது உலக மகா நடிப்புடா என கூறி மீனாவிடம் கண்டிப்பாக அவன் எனக்கு ஆதரவாக எல்லாம் பேசியிருக்க மாட்டான் நடிக்கிறான் என உண்மையை கூறுகிறார்.
புரொமோ
வீட்டிற்கு ரோஹினி வர அண்ணாமலை மற்றும் விஜயா திட்டுகிறார்கள். விஜயா வழக்கம் போல் அதிகமாக பேசுகிறார்.
பின் நாளைய எபிசோட் புரொமோவில், அண்ணாமலை முதலில் வீட்டில் இருப்பவர்களிடம் அன்பாக இரு, வீட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஏதாவது செய் என்கிறார்.
முத்து-மீனா திருமணத்தை சமூக சேவை என்று கூறி டாக்டர் பட்டம் பெற பேசுகிறார் விஜயா.