பக்கா கிரிமினல் பிளான் போட்ட ரோஹினி, முத்து செய்யப்போவது என்ன... சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் எப்போது தான் இவர் சிக்குவார் என எதிர்ப்பார்ப்பது ரோஹினி கதாபாத்திரத்தை தான்.
அவர் திருமணம் ஆனவர், க்ரிஷ் அவரது மகன், பணக்கார குடும்பம் இல்லை என்பதை மறைக்க எத்தனையோ திருட்டு வேலைகள் செய்துவிட்டார்.

பணக்காரர் இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது, அடுத்து அவர் திருமணம் ஆனவர் என்பது எப்போதும் வெடிக்கும் என தெரியவில்லை, அதற்கான சூழல் ஏற்படுவது போல் கடந்த சில எபிசோடுகளில் காட்டப்பட்டது.
இன்றைய எபிசோட்
இன்றைய எபிசோடில், மீனா வீட்டில் முத்துவை வீட்டில் உட்கார வைக்க ஒரு பிளான் உள்ளது என விஜயாவிற்கு போன் செய்கிறார்.
அதாவது மகாபலிபுரத்தில் ஒரு ரெசார்ட் போகலாம், ஒரு இலவச Coupon கிடைத்துள்ளது, பெண்கள் மட்டுமே என்கிறார். இதனால் ரோஹினி, விஜயா, ஸ்ருதி 3 பேரும் கிளம்புகிறார்கள்.

முத்து, ரவி, மனோஜ், அண்ணாமலை மட்டுமே வீட்டில் உள்ளார்கள். போன் செய்த மீனா, எல்லோரும் வேலைக்கு சென்றால் மாமா தனியாக இருப்பார் என கூற முத்து சவாரியை செல்வத்தை பார்க்க கூறிவிட்டு வீட்டிலேயே இருக்கலாம் என முடிவு எடுக்கிறார்.

இதனால் ரோஹினி பிளான் செய்தது போல் மிஷன் சக்சஸ் போல் தான் தெரிகிறது.