முத்து சொன்ன உண்மை, வசமாக விஜயாவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, தமிழகத்திலேயே டாப் 5 லிஸ்டில் வரும் ஒரு தொடர்.
இப்போது கதையில் விஜயா நடனப்பள்ளியில் நடந்த ஒரு விஷயத்தின் கதைக்களம் தான் இப்போது செல்கிறது.
மனோஜ் கர்ப்பமான பெண் குடும்பத்தினரிடம் சென்று பணம் கொடுக்கிறோம், கர்ப்பத்தை கலைத்துவிடுங்கள் என கூற அவர்கள் கோபப்பட்டு அவரை கட்டி வைத்துவிட்டார்கள்.
முத்து-மீனா எப்படியோ பேசி விஜயாவிற்கு வர இருந்த பிரச்சனையை தீர்த்துவிட்டார்கள். மனோஜையும் காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள்.
புரொமோ
பின் நாளைய எபிசோடின் புரொமோவில், பார்வதி விஜயா வீட்டிற்கு பதறியடித்துக் கொண்டு வருகிறார்.
ரதி தீபன் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து நஷ்டஈடு கேட்கிறார்கள் என கூற முத்து அவனால் தான் அவர்கள் பணம் கேட்டிருப்பார்கள் என்றார்.
உடனே விஜயா மனோஜிடம் இதுகுறித்து கேட்க, அவரோ ரோஹினி தான் பேச சொன்னாள், அதனால் தான் போய் பேசினேன் என்று கூறிவிடுகிறார். இதனால் கோபமான விஜயா, ரோஹினிக்கு என்ன ஷாக் கொடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.