திடீரென பாட்டிக்காக பாசமாக பேசும் விஜயா மற்றும் மனோஜ்... என்ன இப்படி மாறிட்டாங்க, சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, அண்ணாமலை என்பவரின் அழகிய குடும்பத்தை பற்றிய கதையாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேர்மையாக குடும்பத்தின் பாசத்தை மட்டுமே நம்பி வாழும் அண்ணாமலை, ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என தனது பிள்ளைகளிடையே ஏற்ற தாழ்வை பார்த்து வளர்க்கும் விஜயா.
எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடர் மக்களின் மனதை வென்றுவிட்டது. டிஆர்பியில் எப்போதும் டாப்பில் இருந்து வருகிறது.
புரொமோ
தற்போது பாட்டியின் 80வது பிறந்தநாள் விழா வீட்டில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டிற்கு வந்த பாட்டி தனது பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வேலைகளை பார்த்து சந்தோஷப்படுகிறார், அதேபோல் சிறப்பான பரிசு கொடுப்பவருக்கு சூப்பர் பரிசு காத்திருக்கிறது என்று கூறுகிறார்.
இதனால் பாட்டி கொடுக்கப்போகும் சிறப்பான பரிசை பெற வேண்டும் என மனோஜ் மற்றும் விஜயா அதை வாங்க பிளான் போடுகிறார்கள்.
திடீரென பாட்டி மீது ஆசை இருப்பது போல் ஏதாவது வாங்க ஆசைப்படுகிறார்கள். இதோ அந்த புரொமோ,