எல்லாம் உங்களால் தான் இப்படி நடக்கிறது, மனோஜ் கேட்ட கேள்வி... ஷாக்கில் விஜயா, சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
வீட்டில யாரிடமும் கூறாமல் விஜயா, மீனா நகையை விற்றதால் அண்ணாமலை இனி உன்னிடம் பேச மாட்டேன், தண்ணீர் கூட வாங்கி குடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதனால் விஜயா கொஞ்சம் கவலையில் இருந்தாலும் ஸ்ருதி தன்னை எதிர்த்து பேசுகிறார் என்ற கோபத்தில் தான் அதிகம் இருக்கிறார்.
இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த பாட்டி அண்ணாமலையிடம் விஜயாவை மன்னிப்பு கேட்க வைக்கிறார்.
அதோடு மாதா மாதம் மனோஜ் ரூ. 50 ஆயிரம் கொடுத்து கடனை அடைக்க வேண்டும் என்றும் விஜயாவிடம் கூறி மனோஜை செய்ய வைக்கிறார்.
நாளைய எபிசோட்
எபிசோட் முடிந்ததும் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியானது. அதில் விஜயா ரோஹினியிடம் சென்று உன் அப்பாவிடம் கேட்டு பணத்தை வாங்கி கொடு என கூறுகிறார்.
பின் மனோஜிடம், உன்னால் நான் எவ்வளவு அசிங்கப்படுகிறேன், என்னால் உன்னால் என கூற, உடனே மனோஜ் இப்படியெல்லாம் நடப்பதற்கு காரணம் நீங்கள் தான் அம்மா என்கிறார். இதனால் ரோஹினி ஷாக் ஆகிறார்.
இதோ அந்த புரொமோ,
You May Like This Video