ஸ்ருதி-மீனா சண்டை போட்ட சந்தோஷத்தில் விஜயா, ஆனால் அங்க தான் டுவிஸ்ட்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர் சிறகடிக்க ஆசை சீரியல்.
சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் விருது விழாவில் சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் பல விருதுகளை பெற்றுள்ளனர். சிறந்த நாயகன், நாயகி என பலர் விருது பெற்றார்கள்.
தற்போது கதையில் ஸ்ருதி-மீனா பேசுவது பிடிக்காமல் விஜயா ஒரு சகுனி வேலை செய்தார். இதனால் ஸ்ருதியின் அம்மா மீனாவை நேரில் சந்தித்து கண்டபடி திட்டியுள்ளார்.
அந்த கோபத்தில் முத்து வீட்டிற்கு வந்து ஸ்ருதியிடம் சண்டை போடுகிறார், அதைப்பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார்.
திடீரென ராமமூர்த்தி இறப்பு கதைக்களம் வந்தது ஏன், பாக்கியலட்சுமி சீரியல் முடியப்போகிறதா?- ஓபனாக கூறிய பிரபலம்
நாளைய எபிசோட்
இந்த நிலையில் நாளைய எபிசோட் புரொமோ ஒன்ற வெளியாகியுள்ளது.
அதில் விஜயாவை நம்ப வைக்க முத்து-மீனா, ஸ்ருதி-ரவி அனைவரும் சண்டை போடுகிறார்கள், ஆனால் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.
இவர்களின் சண்டை பார்த்த அண்ணாமலை, முத்துவிடம் இதுகுறித்து கேட்க, அம்மாவை நம்ப வைக்க தான் சண்டை ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறார்.