புத்திசாலி என கேள்வி கேட்ட மனோஜை தூக்கி வீசிய நபர், பதறிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை சீரியலின் கலகலப்பான புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து-மீனா ஒன்றாக இருந்து விஜயாவிற்கு டென்ஷன் கொடுப்பதை தான் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.
ஆனால் வரும் எபிசோடில் முத்து-மீனா இடையே கடும் சண்டை இருக்கப்போகிறது என்பது உறுதியாக தெரிகிறது.
தனது நண்பன் அம்மா-அப்பாவின் 60வது திருமண நாளை கொண்டாட வருத்தப்படுகிறான் என்பதை கேட்ட முத்து வீடு கட்ட சேர்த்து வைத்துள்ள பணத்தை அவனிடம் கொடுக்க முடிவு செய்கிறார்.
ஆனால் மீனா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, எனவே இருவரின் சண்டை பெரிதாகும் என தெரிகிறது.
மனோஜ் தனக்கு வந்த கடிதத்தை நினைத்து பயந்துகொண்டு இருக்கிறார்.
புரொமோ
இந்த நேரத்தில் நாளைய எபிசோடிற்கான புரொமோவில் முத்து-மீனா சண்டை இடம்பெறுகிறது.
இன்னொரு பக்கம் தன்னை பாதுகாக்க மனோஜ் ஒரு பவுன்சரை ஏற்பாடு செய்வதாக தெரிகிறது. அவர் தனக்கு வேண்டிய சாப்பாடு விஷயங்கள் பற்றி கூற மனோஜ் ஷாக் ஆகிறார்.
ஆனால் நீங்கள் இந்த வேலைக்கு சரியானவர் என்பதை நான் எப்படி நம்புவது என கேட்க, அந்த பவுன்சர் மனோஜை சுற்றி தூக்கி வீசி அடிக்கிறார், இதனால் ரோஹினி பதறிப்போகிறார். இதோ மனோஜின் கலகலப்பான காட்சி புரொமோ,