வழக்கம் போல் மனோஜை ஏமாற்ற நினைத்த ரோஹினி, கடைசியில்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை, விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட விருதுகளை பெற்றது.
இதனால் செம குஷியில் சீரியல் குழுவினர் உள்ளனர். தற்போது கதையில் முத்து தனது நண்பனுக்காக வீடு கட்ட சேர்த்து வைத்துள்ள பணத்தை கொடுக்க முடிவு செய்ய மீனா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இன்னொரு பக்கம் மனோஜ் தன்னை காத்துக்கொள்ள ஒரு Bodyguard ஏற்பாடு செய்கிறார்.
அந்த காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.
நாளைய புரொமோ
நிகழ்ச்சி முடிந்து நாளைய புரொமோ வெளியானது. அதில் ரோஹினி தனது மகன் மற்றும் அம்மாவிற்காக ஒரு புதிய வீடு பார்த்துள்ளார்.
அந்த வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க 1 லட்சம் தேவைப்படுவதால் மனோஜிடம் தனது தோழிக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது கிடைக்குமா என மனோஜிடம் கேட்கிறார்.
ஆனால் மனோஜ் யார் அந்த தோழி, 1 லட்சம் கேட்கிற இதுவரை அவரது பெயரை நான் கேட்டது இல்லையே என ரோஹினிக்கு ஷாக் கொடுக்கிறார். இதோ அந்த புரொமோ,