பண விஷயத்தில் முத்து-மீனா எடுத்த அதிரடி முடிவு, செல்வம் செய்யப்போவது என்ன... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
ரசிகர்களுக்கு ஒரு ஜோடி பிடித்துவிட்டால் அவர்கள் எப்போதுமே சண்டை போடாமல் ஜாலியாக இருக்க வேண்டும் என்று தான் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பார்கள்.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடியாக இருப்பவர்கள் முத்து-மீனா.
இவர்கள் எப்போதும் சந்தோஷமாக சண்டை இல்லாமல் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்தால் தற்போது ஒரு பண விஷயத்திற்காக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
கோட் என்ற மாஸ் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா?
இந்த பிரச்சனை எப்போதும் முடியும் என்பது தெரியவில்லை.
நாளைய புரொமோ
இந்த நிலையில் நாளை, செப்டம்பர் 14, எபிசோடுக்கான புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் மீனா செல்வத்தை சந்தித்து இப்போது கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்து கொண்டாடிவிட்டு பின் பணத்தை திருப்பி கொடுக்க அது பெரிய கஷ்டமாகிவிடும்.
ஒரு தங்கையாக கூறுகிறேன் யோசிங்கள் என கூறுகிறார். இன்னொரு பக்கம் முத்து எப்படி பணம் ஏற்பாடு செய்தாரோ தெரியவில்லை, செல்வத்திற்கு பணம் கொடுக்கிறார்.
இப்போது செல்வம் என்ன செய்யப்போகிறார் என்பதை நாளைய எபிசோடில் காணலாம்