தலையில் காயத்துடன் இருக்கும் மீனாவை பார்த்து விஜயா கேட்ட கேள்வி, ஆடிப்போன முத்து- சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவிக்கு பெயர் வாங்கி கொடுக்கும் தொடராக இப்போது இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல் தான்.
தற்போது இந்த கதையில் மீனாவிற்கு சத்யா சிகரெட் பிடிக்கும் விஷயத்தை அவரது அம்மா கூறுகிறார், இதனால் கோபம் அடைந்த மீனா, சிட்டியிடம் சென்று சண்டை போடுகிறார்.
அங்கு இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாக சண்டை நடக்கிறது, மீனாவை கீழே தள்ளி விடுகிறார் சிட்டி. ஆனால் அந்த நேரத்தில் முத்து வர சிட்டியை ஒரு கை பார்த்துவிட்டு மீனாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.
செம புரொமோ
இந்த நிலையில் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் வீட்டிற்கு கட்டுடன் வந்த மீனாவை பார்த்து என்ன தலையில் கட்டு, பார்த்து போக கூடாதா, அடி பலமா என அக்கறையாக கேட்கிறார்.
அவர் பேசியதை கேட்டதும் மீனா, முத்து, அண்ணாமலை அனைவருமே ஆடிப்போகிறார்கள். இதோ அந்த புரொமோ,