அம்மா, மகன் க்ரிஷுடன் ஒரு இடத்திற்கு வரும் ரோஹினி, அங்கே இருப்பது இவரா?... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, இந்த சீரியலின் இன்றைய எபிசோட் விஜயாவை அண்ணாமலை வெளுத்து வாங்கும் எபிசோடாக முடிந்துள்ளது.
ரோஹினி கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு பார்வதி பணம் வீட்டில் தான் இருக்கிறது சரியாக பார்க்கவில்லை என விஜயாவிடம் கூறுகிறார். இந்த விஷயத்தை விஜயா வீட்டில் கூறியதோடு ரூ. 3 லட்சம் பணத்தை முத்துவிடம் கொடுத்துவிடுகிறார்.

பின் அண்ணாமலை பணம் கிடைத்தது, கொடுத்தாச்சு, ஆனால் மீனா மீது தேவையில்லாமல் பழி போட்டதற்கு என்ன பதில் என விஜயாவை பேச விடாமல் கேள்வி கேட்டு மடக்குகிறார் அண்ணாமலை.
புரொமோ
எபிசோட் இந்த காட்சிகளுடன் முடிவடைய நாளைய எபிசோடின் புரொமோ வெளியானது. அதில், ரோஹினி, க்ரிஷ் தனது அம்மாவுடன் ஒரு இடத்திற்கு வருகிறார். அங்கு அண்ணாமலை வேலை விஷயமாக பேச வந்துள்ளார்.
நாளைய எபிசோடில் ரோஹினி க்ரிஷுடன் இருப்பதை பார்ப்பாரா அல்லது வழக்கம் போல் அவர் தப்பித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பாஜகவில் சேர்ந்தால் போயிடும் - யார் சொன்னது தெரியுமா? IBC Tamilnadu
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri