முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரங்களாக ரோஹினி-மலேசியா மாமா சீன்கள் தான் அதிகம் வந்தது.
ஒரு வாரம் முழுவதும் அண்ணாமலை குடும்பத்தினர் பிரவுன் மணியை பார்ப்பார்களா என்றே கதையை கொண்டு சென்றார்கள். பின் அடுத்த வாரத்தில் எப்படியோ பிரவுன் மணியை முத்து-மீனா கண்ணில் பட வைக்க பிரச்சனை வெடித்தது.
விஜயா பொங்கி எழ பின் பாட்டி பிரச்சனை முடித்து வைத்தார்கள். வழக்கம் போல் விஜயா, மனோஜ்-ரோஹினியை பிரித்து வைக்கும் வேலையை பார்த்து வருகிறார்.
புரொமோ
பின் நாளைய எபிசோடிற்கான புரொமோவில், முத்து மற்றும் அவரது நண்பர் இருவரும் வெளியே ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் சீதா தனது காதலருடன் பைக்கில் வந்து இறங்கி பேசிக் கொண்டிருக்கிறார்.
முத்து எதையோ பார்ப்பது போல் காட்டி அப்படியே முடிக்கிறார்கள். சீதா மற்றும் அவரது காதலரை முத்து பார்ப்பாரா இல்லையா என்பதை நாளை காண்போம்.

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
