முதல் நாள் கொண்டாட்டமாக கடையை திறந்த மனோஜ், அடுத்த நாளே செய்த வேலை- ஷாக்கில் குடும்பம், சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய நிகழ்ச்சியில் கோலாகலமாக மனோஜ் கடையை திறக்கிறார்.
திறப்பு விழாவிற்கு விஜயா ஸ்பெஷலாக ஸ்ருதியின் அம்மாவை அழைக்க மீனாவின் குடும்பத்தை அழைக்கவில்லை. இதனால் அண்ணாமலை கோபமாக விஜயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
பின் ஸ்ருதியின் அம்மா ஏசி வாங்க மீனா மிக்ஸி வாங்கியதற்கு விஜயா மோசமாக பேசுகிறார். இதனை கண்ட பாட்டி விஜயாவை வறுத்தெடுக்கிறார்.
அதோடு முதல் நாளே அதிகம் படித்தவன் என்பதை காட்டி விடுகிறார் மனோஜ். இப்படி மகிழ்ச்சி, வருத்தம் என எல்லாம் கலந்த கலவையாக இன்றைய எபிசோட் முடிகிறது.
நாளைய புரொமோ
முதல் நாள் கோலாகலமாக கடையை திறந்த மனோஜ் அடுத்த நாளே வீட்டில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு வேலையை செய்கிறார்.
அதாவது கடையை திறக்க கிளம்பாமல் இழுத்து போத்திக்கொண்டு தூங்குகிறார். அதிலும் விஜயா அவரை எழுப்புவதை கண்டு வீட்டில் இருப்பவர்கள் ஷாக் ஆகிறார்கள்.

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
