முத்து, மீனாவிடம் வசமாக சிக்கிய ரோஹினி, எங்கே யாரை பார்க்க சென்றார் பாருங்க... சிறகடிக்க ஆசை அதிரடி புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, தமிழக மக்களின் பேராதரவை பெற்று கொண்டாடப்படும் ஒரு தொடர்.
அதிலும் முத்து-மீனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.
நாளுக்கு நாள் சீரியலால் அவர்களின் மவுசு கூடிக்கொண்டே இருக்கிறது. இப்போது கதையில் உடல்நிலை சரியில்லாத மீனாவை, விஜயா கொடுமைப்படுத்த முத்து அதிரடி காட்டுகிறார்.
இனி சமையல் விஷயத்தில் என்ன முடிவு அண்ணாமலை எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
நாளைய எபிசோட்
சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறதா, கடைசி எபிசோட் என்ன?... ஓபனாக கூறிய தொடர் நடிகை
இன்றைய எபிசோடில் மீனா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமைக்கவில்லை, அதை வைத்து விஜயா, மனோஜ் மற்றும் ரோஹினி பெரிய பிரச்சனையை உருவாக்கினர்.
ஆனால் முத்து இனி மீனா யாருக்காகவும் சமைக்க மாட்டா, வேண்டியவர்கள் சமைத்துக்கொள்ளட்டும் என்று கூறிவிடுகிறார்.
பின் நிகழ்ச்சியின் கடைசியில் நாளைய எபிசோடின் ஒரு குட்டி புரொமோ வருகிறது, அதில் ரோஹினியின் அம்மா அவருக்கு போன் செய்து கிரிஷ் மருத்துவமனையில் இருப்பதாக கூறுகிறார்.
இதனால் ரோஹினி மருத்துவமனைக்கு செல்ல அங்கு மீனா மற்றும் முத்து வருகிறார்கள்.
ஏற்கெனவே ரோஹினியை சந்தேகப்படும் முத்து அவர் மருத்துவமனை வந்திருப்பதை வைத்து ஏதாவது கண்டுபிடிப்பாரா இல்லையா என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.