கரண்ட் ஷாக் அடித்தது போல் நடன பள்ளி தொடங்கிய முதல் நாளே விஜயாவிற்கு வந்த பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் டிஆர்பியின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்.
கடைசியாக மீனாவை காணவில்லை என முத்து தேடிய டிராக் ஓடியது.
இப்போது விஜயா மீனா வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்ரா, என்னையே வேலை வாங்குகிறார் எல்லோருக்கும் நான் வேலை செய்ய வேண்டியதாக உள்ளது என பார்வதியிடம் புலம்புகிறார்.
இதனால் விஜயா பார்லருக்கு வரேன் என கூற எங்கே நாம் மாட்டிக்கொள்ள போகிறோம் என ரோஹினி விஜயாவை நடனம் வைத்து தூண்டிவிடுகிறார்.
முதல் நாளே சிக்கல்
இந்த நிலையில் விஜயா பரதநாட்டிய நடன பள்ளி ஒன்றை திறக்கிறார். முதல் நாள் யாராவது வருவார்களா என காத்துக் கொண்டிருக்க ஒரு வயதானவர் வருகிறார்.
அவர் குழந்தைகளை தான் நடன பள்ளியில் சேர்க்க வருகிறார் என விஜயா நினைக்க அவர் நான் மின்சார அலுவலகத்தில் இருந்து வருகிறேன், நடன பள்ளியில் கரண்ட் பயன்படுத்த அதிக தொகை கட்ட வேண்டும் என கரண்ட் ஷாக் அடித்தது போல தகவலை கூறுகிறார்.
விஜயாவோ இந்த பிரச்சனை என முழக்கிறார், நாளைய எபிசோடின் இந்த புரொமோ வைரலாகிறது.