வீட்டிற்கு வந்த உடனே விஜயாவை வெளுத்து வாங்கும் பாட்டி... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
மீனாவின் நகையை கவரிங்காக மனோஜ் மற்றும் விஜயா மாற்றிய விஷயம் குடும்பத்தினருக்கு தெரிந்துவிட்டது. இதனால் அண்ணாமலை விஜயாவிடம் இனி பேச மாட்டேன், முகத்தை கூட பார்க்க மாட்டேன் என இருக்கிறார்.
ஆனால் விஜயா, அண்ணாமலை பேசாதது கூட வருத்தம் இல்லை ஸ்ருதி தன்னை கேள்வி கேட்பது கோபமாக வருவதாக விஜயா பார்வதியிடம் இன்றைய எபிசோடில் கூறுகிறார்.
இன்னொரு பக்கம், மீனா முத்துவிடம் மாமா, அத்தையிடம் பேசுவதற்கு ஏதாவது செய்யுங்கள் என்கிறார்.
அடுத்த புரொமோ
இன்றைய எபிசோட் முடிந்ததும் வந்த புரொமோவில், முத்து வீட்டில் நடக்கும் பிரச்சனையை பாட்டியிடம் கூறி அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
வீட்டிற்கு வந்த பாட்டியை விஜயா வரவேற்கிறார், ஆனால் பாட்டி அவரிடம் கராராக பேசுகிறார். இதோ நாளைய எபிசோடிற்காக சிறகடிக்க ஆசை புரொமோ,