ரவி சொன்ன சந்தோஷமான ஒரு விஷயம், முத்து-மீனாவிற்கு வெற்றி வருமா?... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேவரெட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். இன்றைய எபிசோடில் மீனா, ரோஹினி கர்ப்பமாக இருப்பதாக புரிந்துகொண்டு வீட்டில் கூறிவிடுகிறார்.
இதனால் கோபமான ரோஹினி எதுவும் தெரியாமல் பேசாதீர்கள் என கோபமாக திட்டிவிடுகிறார். பின் மனோஜிடம் நாம் ஒரு டெஸ்ட் எடுத்து பார்ப்போமா என ரோஹினி கேட்க அதற்கு மனோஜ் மறுக்கிறார்.
இதனால் கோபமான ரோஹினி மனோஜின் முந்தைய வாழ்க்கை குறித்து பேச அவரும் பதிலுக்கு தனது மனைவி குறித்து மோசமாக கேட்கிறார்.
இந்த விஷயம் விஜயா காதுக்கு செல்ல மனோஜை எப்படி நீ அப்படி கேட்கலாம் என ரோஹினி திட்டுகிறார், அதோடு எபிசோட் முடிகிறது.
நாளைய எபிசோட்
இன்றைய எபிசோட் முடிந்ததும் நாளைய எபிசோடின் புரொமோ வந்துள்ளது. அதில் ரவி எனது கம்பெனி ஒரு போட்டி நடத்துகிறார்கள். சிறந்த ஜோடி யார் என்ற போட்டி, இதில் ஜெயித்தால் ரூ. 1 லட்சம் பரிசு என்கிறார்.
இதில் முத்து-மீனா கலந்துகொண்டால் அவர்கள் தான் ஜெயிப்பார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.