சிட்டியால் முத்து-மீனாவிற்கு ரோட்டில் வந்த ஆபத்து, தப்பிப்பார்களா?... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
கடந்த வார டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல்களில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை டாப்பில் வந்தது.
இதனால் சீரியல் குழுவினர் கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றனர். இப்போது கதையில் சத்யா சிகரெட் பிடிப்பது சிட்டியுடன் சேர்ந்ததால் தான் என மீனா அவரிடம் சண்டை போட இதனால் பிரச்சனையும் நடந்தது.
மீனா தலையில் கட்டுடன் இருக்கிறார், ஆனாலும் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்கிறார். இன்னொரு பக்கம் ரோஹினி வீடியோவை வெளியிட பிளான்களும் போட ஆரம்பித்துவிட்டார்.
சீரியல் புரொமோ
இன்றைய எபிசோட் முடிவடைந்ததும் நாளை ஒளிபரப்பாக போகும் சிறகடிக்க ஆசை எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது.
அதில், மீனா-முத்து பூ கொடுக்க ஸ்கூட்டியில் செல்ல சிட்டி அவர்களுக்கு விபத்து ஏற்படுத்த காரை வேகமாக ஓட்டிச் செல்கிறார்.
ஆனால் இந்த பரபரப்பான புரொமோவில் சிட்டி பின்னாடி வேகமாக வருவதை முத்து பார்த்துவிட்டு ஒரு ஓரமாக நின்றுவிடுகிறார். இதோ அந்த புரொமோ,