கடும் கோபத்தில் விஜயா.. ரோகிணியை பழிவாங்க போகும் மனோஜ்..
வீட்டிற்குள் வந்த மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. சீதாவின் தாலியை திருடிய பெண்ணை முத்துவும், மீனாவும் பிடித்துவிட்டனர். போலி சாமியாராக வந்து, மீனா வீட்டில் இருந்தால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து, அதனால் மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன பெண்தான், இந்த திருடி என தெரிந்துவிட்டது.

மீனா மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட்டார். ஆனால், சாதாரணமாக வரவில்லை, விஜயா அவருக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வா மருமகளே என கூறினார். ரோகிணி சொல்லித்தான் போலி சாமியாராக வேடமிட்டு இப்படி செய்தேன் என அந்த திருடி கூறிவிட்டாள். ரோகிணி மீண்டும் தங்களை முட்டாள் ஆக்கிவிட்டால் என்பதால், விஜயா கடும் கோபத்தில் இருக்கிறார்.

கடும் கோபத்தில் விஜயா
இந்த சமயத்தில், அந்த பார்லர் காரியை ஏதாவது செய்ய வேண்டும் என விஜயா கூற, அதற்கு மனோஜ் தன்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது என கூறுகிறார். இதன்பின், ரோகிணிக்கு போன் செய்து மனோஜ் பேசுகிறார். நேரில் வா, உன்னிடம் பேசவேண்டும் என கூற, ரோகிணி மகிழ்ச்சியடைகிறார்.

ரோகிணியை பழிவாங்குவதற்காக மனோஜும் விஜயாவும் சேர்ந்து இப்படியொரு திட்டத்தை போட்டுள்ளனர். இதில் வழக்கம்போல் அவர்களே மாட்டிக்கொள்கிறார்களா? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
