விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ
சிறகடிக்க ஆசை
பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் சிந்தாமணியை எதிர்த்து போட்டியிட்ட மீனா, அவரை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இந்த தேர்தல் விஷயங்கள் ஒரு பக்கம் பரபரப்பாக சென்ற நிலையில், மனோஜுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் வேலைகளையும் விஜயா விறுவிறுப்பாக செய்தார்.

இதில், வெளிநாட்டில் உள்ள குடும்பத்தில் இருந்து மனோஜுக்கு பெண் பார்த்துள்ளனர். மனோஜுக்கும் அந்த பெண்ணுக்கும் தற்போது நிச்சயதார்த்தம் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரோகிணியின் விவாகரத்து வழக்கு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்
விவாகரத்து வழக்கில் தனக்காக தானே விவாதித்து வருகிறார் ரோகிணி. இந்த முறை நீதிமன்றத்திற்கு வரும்போது தனது மகன் க்ரிஷையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார். தன் மகனுடனும், அந்த குடும்பத்துடனும் வாழ ஆசைப்படுவதாக ரோகிணி கூறுகிறார்.

மேலும், மனோஜுக்காக நான் நிறைய கடன் வாங்கியிருப்பதாகவும், நான் வாழ்வதற்கு வழியே இல்லை என்றும் அவர் கூற, நீதிபதி இந்த வழக்கை இன்னும் 6 மாதத்திற்கு தள்ளிவைத்துவிட்டார். அதுமட்டுமின்றி, ரோகிணிக்கு தேவையான செலவுகளையும் பொறுப்புகளையும் மனோஜ்தான் பார்க்க வேண்டும் என்றும், ரூ. 25,000 ரோகிணியின் செலவிற்காக அவர் தரவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இப்படியொரு உத்தரவு வந்துவிட்டது, ஆனால் நாளை நிச்சயதார்த்தம் இருக்கிறதே என விஜயாவிடம் மனோஜ் கேட்க, நீதிமன்றத்தில் நடந்த எதுவும் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிய கூடாது என விஜயா கூறுகிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri