ஒன்றாக பிரபல உணவகத்திற்கு சென்ற சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் முத்து மற்றும் மீனா- வீடியோவுடன் இதோ
சிறகடிக்க ஆசை
விஜயா செய்யும் கொடுமைகளை எதிர்த்து பேசு, அவர்கள் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்யாதே என முத்து எவ்வளவோ முறை மீனாவிடம் கூறிவிட்டார் ஆனால் அவர் கேட்பதாகவே இல்லை.
அதேபோல் எல்லோருக்கும் சமையல் செய்வதை முதலில் நிறுத்து என முத்து அதிகம் கூறியிருக்கிறார், ஆனால் விஜயா மீனாவை ஒவ்வொருவருக்கும் பிடித்த உணவை சமைக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஒரு எபிசோடில் ஜுரம் இருந்தபோதும் சமையக்கவில்லை என பிரச்சனை செய்திருந்தார்.
இந்த நிலையில் தான் நாளைய எபிசோட் புரொமோவில், ரோஹினி சமைக்கவில்லையா என கேட்க அதற்கு மீனா கிட்சனில் எல்லாம் உள்ளது, காய்கறி இருக்கிறது நீங்கள் சமைத்துக்கொள்ளுங்கள் என யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பேசுகிறார்.
புரொமோவை பார்த்த ரசிகர்கள் நம்ம மீனாவா இது இப்படி பேசுவது என ஷாக் ஆகியுள்ளனர்.
லஞ்ச் அவுட்
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் வெற்றி வசந்த் மற்றும் கோமதி இருவரும் ஒன்றாக வெளியே பிரபல கடைக்கு சாப்பிட வந்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
இதோ அவர்கள் வெளியே சென்ற வீடியோ,